சேலம் மாவட்டம் ஓமலூர் பொறி யியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ், அவரது உறவினர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோ பதிவு, வாட்ஸ் அப் மூலம் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன்சின்னமலை கவுண் டர் பேரவை நிறுவனர் யுவராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் யுவராஜ் தலை மறைவாக இருந்தபோது அவ்வப் போது ஆடியோ பதிவை வெளி யிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த 7 மாதங் களாக சிறையில் உள்ள யுவராஜ் தனது உறவினர்களிடம் செல் போன் மூலம் பேசிய ஆடியோ பதிவு, வாட்ஸ் அப் மூலம் வெளி யாகி பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ள தாவது: சிபிசிஐடி போலீஸார் கூலிப்படைபோல் செயல்படு கின்றனர். அரசியல்வாதிகள் சொல்வதையே காவல்துறை யினர் செய்கின்றனர். தேர்தல் வரை நான் வெளியில் வரக்கூடாது என திட்டம்போட்டு செயல்படுகின் றனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார், நான் சிறையில் இருந்து உயிருடன் வெளியில் வரக்கூடாது என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வருகிறார்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார் என்பது வாகன ஓட்டுநருக்கு தெரி யும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் மூடிமறைக்க பார்க் கின்றனர். பணம் வாங்கிக் கொண்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்க கூடாது. குற்றம் செய்யும் அரசியல் வாதிகளை பொதுமக்கள் தண் டிக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் உள்ளது.