தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது: 6.60 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

சி.கண்ணன்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது. நாடுமுழுவதும் 6.60 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 85 சதவீதம் இடங்கள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை (AIPMT) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் 1-ம் தேதி (இன்று) நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதற் காக நாடுமுழுவதும் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு விண் ணப்பித்தனர்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மே 1-ம் தேதி நடக்கும் நுழைவுத்தேர்வை முதலாவது கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வரும் ஜூலை 27-ம் தேதி இரண்டாவது கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது. நாடுமுழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடைபெறும் தேர்வை 6.60 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை யில் 39 தேர்வு மையங்களில் சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் அரைக்கை வைத்த ஆடையை அணிந்து வரவேண்டும். புளூடூத், கேமரா போன்ற தகவல் தொழிநுட்ப சாதனங்கள் மறைக்கும் வகையி லான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. செருப்பு மட் டுமே அணிந்து வரவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி விளக்கம்

இதுதொடர்பாக தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வை எழுத வேண்டும். தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை. அதனால் இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம் என்று நினைக்க வேண்டாம். முதல் கட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. முதல் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காத சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT