இருளர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மின் இணைப்பு பெற நிதியுதவி வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். 
தமிழகம்

கலவை அருகே 20 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அவதி; 19 இருளர் குடும்பங்களுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி இல்லாமல் வசித்து வந்த 19 இருளர் குடும்பங்களுக்கு மின் இணைப்பு பெற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று நிதியுதவி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் அத்தியானம் கிராமத்தில் 19 இருளர் குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதியில்லாமல் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வரும் இருளர் குடும்பங்களின் நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மின்சார வசதி யில்லாமல் அவதியுற்று வந்த 19 இருளர் குடும்பங்களுக்கு மின் இணைப்பு பெற வைப்பு தொகையான தலா ரூ.3 ஆயிரம் என ரூ.57 ஆயிரத்துக்கான தொகையை ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து நேற்று வழங்கினார்.

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் மின்சார இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். மின் வசதி இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த இருளர் குடும்பத்தினர் மகிழ்ச்சி யடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில, திட்ட இயக்கு நர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஷமீம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT