தமிழகம்

திருவண்ணாமலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாணவர்கள் அவதி

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுத்தேர்வை எழுதி வரும் மாணவர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலியாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மின்சாரம் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மின் வெட்டுக்கு மக்களிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்த நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் மின் விநியோகம் சற்று சீரானது. இந்நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது.

இதற்கு, கோடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் விநியோகம் தடைபட்டு வரு வதாக மின்வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து மின் விநி யோகம் தடைபட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். அசானி புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மழை சாரல் காரணமாக வெப்பம் சற்று தணிந்துள்ளதால், வெப்பத்தில் இருந்து தப்பித்தனர்.

அதேநேரத்தில் பொதுத் தேர்வை எழுதி வரும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மின்சாரம் இல்லாததால் பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் மாணவர்களின் நலன் கருதி தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT