தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பெட்ரோல் லிட்டருக்கு 83 பைசாவும், டீசல் ரூ.1.26 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணம் உயர்ந்து விலைவாசி ஏற்றத்திற்கு வழி வகுக்கும். இது சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும். மேலும் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசு விற்பனை வரியையும் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருபுறம் கலால் வரி உயர்வு, மறுபுறம் ஆயில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு விலை நிர்ணயம் செய்வதால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள. எனவே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, ஆயில் நிறுவனங்களிடம் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT