தமிழகம்

கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க பணியாற்ற வேண்டும்: ஆ.ராசா பேச்சு

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ராஜேந்திரனை ஆதரித்து, திமுக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக கொள்கைப் பரப்பு செயலாளரான ஆ.ராசா பேசும்போது, "திமுக தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் ஒரு இளைஞருக்கு உரிய துடிப்போடு பணியாற்றுகிறார். 93 வயதிலும் தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் மக்களைச் சந்திப்பது கருணாநிதி மட்டுமே. அவரை 6-வது முறையாக மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். இதில், மாவட்ட திமுக செயலாளரும், அரியலூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT