தமிழகம்

மெரினாவில் ‘திராவிட மாடல்’ மணற்சிற்பம்: பார்வையிட்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவை ஓட்டி மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட மணற்சிற்பத்தை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டு நெகிழ்ந்தார்.

திமுக அரசின் ஓராண்டு நிறைவை ஓட்டி தமிழ்நாடு அரசின் சாதனையை விளக்கும் வகையில் மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதை வடிவமைத்திருந்தார். திராவிட மாடல் என்ற இந்த மணற்சிற்பத்தை 8 மணி நேரத்தில் இவர் வடிவமைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மணற்சிற்பத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும், அதற்கு முன்பு நின்று நெகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

நாளை இரவு வரை இந்த மணற்சிற்பத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT