தமிழகம்

ரூ.461.22 கோடியில் அடையாளச் சின்னமாக மாறும் மாமல்லபுரம்!

செய்திப்பிரிவு

சென்னை: மாமல்லபுரம் ரூ.461.22 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா துறையின் அடையாள சின்னமாக மாறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இங்கு உள்ள கடற்கரை கோவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவுச் சின்னம் ஆகும். இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கலைச் சின்னமாக மாமல்லபுரம் கடற்கைரை கோவில் உள்ளது.

இந்திய பிரதமர் மோடி - சீன அதிகர் ஜிங் பிங் சந்திப்பு இங்குதான் நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய செஸ் விளையாட்டு போட்டியான செஸ் ஒலிம்பியாட் இங்குதான் நடைபெறவுள்ளது.

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட மாமல்லபுரம் அடையாள சின்னமாக மாறவுள்ளதாக சுற்றுலாத் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை விளக்க குறிப்பேட்டில், "ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகம், மேம்பாட்டிற்கான முக்கியத் தளங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை கண்டறிந்து அதற்கான ஆரம்ப திட்ட அறிக்கை ஓர் ஆலோசகர் மூலம் ரூ.461.22 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் சுற்றுலா துறை அமைச்சகத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT