காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், ‘‘விக்னேஷின் தலை பின்பகுதி, இடது கண் புருவம், இடது கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தக்கட்டும் உள்ளது. மேலும், வலது தோள்பட்டையில் காயம் மற்றும் ரத்தக்கட்டு, இடது கை, மேல் உதடு, கீழ் உதடு, வலது கை மூட்டு, முதுகுத் தண்டின் கீழ்பகுதியின் வலதுபுறம், இடுப்பின் கீழ் பகுதி, காலின் கீழ் பாகம், இடது கால் பாதத்தில் பலத்த காயம் மற்றும் ரத்தக்கட்டு உள்ளது. இப்படி, உடலில் மொத்தம் 13 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயத்துக்கான காரணம் லத்தி அல்லது வேறு வகையான பொருட்களோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.