ஹெச்.ராஜா 
தமிழகம்

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரத்தில் தடையை மீறி மத கடமையை நிச்சயம் செய்து முடிப்போம்: ஹெச்.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

காரைக்குடி: தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தின்போது பல்லக்கில் தூக்கிச்செல்ல யார் தடை விதித்தாலும், தடையை மீறி இந்துக்கள் மதகடமையை நிச்சயம் செய்து முடிப்பர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. இந்து மதத்தை பொறுத்தவரை குருமகா சன்னிதானங்கள் இறைவனை அடைவதற்கு நமக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்.

அதனால் குருமகா சன்னிதானங்களை பகவானுக்கு இணையாக பட்டினப் பிரவேசத்தின்போது பல்லக்கில் தூக்கிச் செல்வது மரபு. இந்து மத உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல் சட்டப்பிரிவில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களின்சம்பிரதாயங்களை கடைபிடிப்பதற்கான உரிமை தரப்பட்டுள்ளது.

அதனால் தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தின்போது, பல்லக்கில் தூக்கிச் செல்ல யார்தடை விதித்தாலும், தடையை மீறி இந்துக்கள் மத கடமையை செய்து முடிப்பர். தேவை ஏற்படின் பல்லக்கில் தூக்கிச் செல்லுமிடத்தில் நான் இருப்பேன் என்றார்.

SCROLL FOR NEXT