கொடைக்கானல்: கோடை சீசன் உச்சமடைந்துள்ள நிலையில் கொடைக்கானல் மலைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எச்சரிக்கை பலகை, பாதுகாப்பு வளையம் இன்றி பணிகள் மேற் கொள்ளப்படுவதால் இரவு நேரத் தில் சுற்றுலாப் பயணிகள் விபத் தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது.
கொடைக்கானலுக்கு கோடை சீசனில் (ஏப்ரல், மே) சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.
வத்தலகுண்டு முதல் கொடைக் கானல் வரை பல வளைவுகளை கொண்ட மலைச்சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். எந்த மாதம் அதிக போக்குவரத்து இருக்கும் என்பது நெடுஞ்சாலைத் துறையினருக்கு தெரியும்.
இருந்தபோதும், குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் மாதங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல், சீசன் நேரத்தில் ரோட்டை தோண்டி பணிகள் மேற்கொள்கின்றனர்.
கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் பெருமாள் மலை, மச்சூர் அருகே பாலங்களை சீரமைக்கும் பணி, சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இப்பணி நடக்கும் இடத்தில் எந்தவித எச்சரிக்கைப் பலகையோ, பாது காப்பு வளையமோ அமைக்கப் படவில்லை. இரவு நேரத்தில் ஒளிரும் பிரதிபலிப்பான்களும் வைக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் எதிரெதிரே வாக னங்கள் செல்ல முடியாத நிலையில், பணிகள் நடக்கும் இடத் தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மலைச்சாலையின் ஓரத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. இதுபோன்ற இடங்களில் நெடுஞ்சாலைத்து றையினர் சாலையோரத் தடுப்பு களை அமைக்க வேண்டும்.
மேலும் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் சாலை யோரம் மணல், ஜல்லியை கொட்டியதால் இடையூறாக உள்ளது. பாலப் பணி முடிந்த ஒரு இடத்தில் கம்பிகள் சாலையின் மையத்தில் நீட்டிக் கொண்டுள்ளன.
மேலும் பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனமாக உள் ளதால் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. வரும் ஆண்டுகளிலாவது கோடை சீசன் நேரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை நெடுஞ்சாலைத் துறையினர் தவிர்க்க வேண்டும். மலைச்சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதை நெடுஞ் சாலைத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு.