காரைக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவின் கனிவான பழகும் குணம் கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு இத்தொகுதி `கை’ கொடுக்குமா? என்கிற எதிர்பா ர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட் பாளராக கேஆர்.ராமசாமி போட்டி யிடுகிறார். இவரது சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள கப்பலூர். தொகுதி சீரமை ப்புக்குமுன் திருவாடானை தொகு தியில் இருந்ததால் 5 முறை தொடர்ச்சியாக எம்எல்ஏவாக இருந்தார். இவரது தந்தை ராம.கரியமாணிக்கம் அம்பலம் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
தொகுதி சீரமைப்புக்குப்பின் காரைக்குடி தொகுதியானதால், கடந்த முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான இவருக்கு கடும் போட்டியில் காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு கிடைத்த பரிசாக இரண்டாவது முறையாக வேட்பாளராகி உள் ளார். காங்கிரஸ் பாரம்பரியம், தொகுதியில் தனிப்பட்ட செல் வாக்கு, கூட்டணி கட்சி பலம், அதிமுக மீதான அதிருப்தி ஆகியவை இவருக்கு சாதகமாக உள்ளன. இருப்பினும் எளிதில் அணுக முடியாதவர், வாய்ப்பு கிடைக்காதவர்களின் எதிர்ப்பு, சொந்தக் கட்சியினரின் உள்குத்து வேலை ஆகியவை இவருக்கு பாதகமாக உள்ளன.
அதிமுக வேட்பாளராக நகர் மன்றத் தலைவராக இருந்த கற்பகம் இளங்கோ போட்டியிடுகிறார். கல்லூரிப் பேராசிரியை, முன் னாள் எம்எல்ஏவாக இருந்த அனுபவம், நகரத்தார்களிடையே நல்ல தொடர்பு, அனைவரிடமும் கனிவாகப் பழகும் குணம், ஆளும் கட்சியின் நலத்திட்டங்களை நம்பி பிரச்சாரம் ஆகியவை இவருக்கு சாதகமாக உள்ளன.
அதிமுக எம்எல்ஏ சோழன் சித.பழனிச்சாமி மீதான அதிருப்தி, நகராட்சியில் சாலை வசதிகள், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளில் அக்கறை காட்டாதது, இவர் மீதான கமிஷன் புகார் ஆகியவை இவருக்கு பாதகமாக உள்ளன.
இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் போட்டியிடுகிறார்.
காரைக்குடி தொகுதியில் 10 ஆண்டுகள் வசித்தவர், மக்களிடம் இருந்த தொடர்பு, இரு கட்சிகள் மீதான ஊழல் புகார் பிரச்சாரம், வைகோ, விஜயகாந்த் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரங்கள் இவருக்கு சாதகமாக உள்ளன.
வைகோ பிரச்சாரத்தில் பேசும் போது, செவந்தியப்பன் செல வழிக்க பணம் இல்லை, போட் டியிடவில்லை என்றுதான் சொ ன்னார், நான்தான் கட்டாயப்படுத்தி நிறுத்தி யிருக்கிறேன், யாரும் தேர்தல் செலவு கேட்டு நச்சரிக்காதீர்கள் எனக் கூறும் அளவுக்கு தேர்தல் செலவில் சிக்க னத்தை கடைபிடிப்பதே இவருக்கு பாதகமாக உள்ளது.
பாஜக மாநில மகளிர் அணித் தலைவி வி. முத்துலெட்சுமி. இவர் கட்சியின் பலத்தை மட்டுமே நம்பி போட்டியிடுகிறார். இவர் பிரதமர் மோடியின் சாதனைகளைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு ஆதரவாக தேசிய செய ற்குழு உறுப்பினர் இல.கணேசன் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார்.