ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவ்வப்போது பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்.
அதனடிப்படையில், ராணிப் பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட், காந்தி ரோட்டில் உள்ள கடை களில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் சுமார் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த கடை உரிமையாளருக்கு அபராத மாக 2 ஆயிரம் மஞ்சப்பைகளை வாங்கி நகராட்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகம், மார்க்கெட், கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் தினசரி ஆய்வு நடத்தவும், பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், விதி மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜூக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.