தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலால் சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. அதனால், சுற்றுலாத் தலங்களின் வருமானமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ம் ஆண்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ள மாநிலங் களின் பட்டியலை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், முந்தைய ஆண்டு முதலிடம் பிடித்த மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலி டம் பிடித்தது. வெளிநாட்டினரைக் கவரும் ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி, ராமேசு வரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங் களால் தமிழகம் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. அந்த ஆண்டில், தமிழகத்துக்கு 46.60 லட்சம் வெளி நாட்டினர் வருகை தந்ததாகக் கூறப் பட்டது.
ஆனால், கடந்த 2 ஆண்டு களாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையத் தொடங்கி உள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாக வும் விளங்குகிறது. இங்கு மீனாட்சி யம்மன் கோயில், திருமலைநாயக் கர் மகால், காந்தி அருங்காட்சியகம் மற்றும் புராதனமான ஆன்மிக வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக ளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டாக தென் மாவட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டினர் வருகை குறைந்தது. 2013-ம் ஆண்டு மதுரைக்கு 92,631 வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2014-ம் ஆண்டு 99,637 பேரும், 2015-ம் ஆண்டு 88,279 பேரும் வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டு களை ஒப்பிடும்போது கடந்த ஆண் டும், இந்த ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் குறைந்துள்ளது.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால் தேர்தல் ஆணை யத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் சுதந்திரமாக சுற்றுலாத்தலங்களை பார்வையிட முடியாது என்று வெளிநாட்டினர் பலர், தங்கள் சுற்றுலாத் திட்டங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்ததாகக் கூறப் படுகிறது. அதனால், சுற்றுலா நகரங்களின் வருமானமும், அங் குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகி றது.
காலநிலையும் முக்கிய காரணம்
மதுரை டான் டூரிசம் ஆஃப் டெவலப்மென்ட் ஒருங்கிணைப் பாளர் கே.பி. பாரதி கூறிய தாவது: உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்று லாத் தலங்களுக்கு அதிக அளவில் வராமல் இருப்பதற்கு தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும், இந்த ஆண்டு மதுரையில் நிலவும் காலநிலையும் முக்கிய காரணம். அதனால், இந்த ஆண்டு சித்தி ரைத் திருவிழாவில்கூட திருக் கல்யாணம், தேர்த்திருவிழா, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி யில் அதிகளவு வெளிநாட்டினர் பங்கேற்கவில்லை. தற்போது இணையத்திலேயே சுற்றுலாத் தலங்களின் நிலவரத்தை அறிந்து கொண்டு தங்கள் பயணத் திட் டத்தை வெளிநாட்டினர் மாற்றிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரமின்மையால் தயங்கும் பயணிகள்
பொதுவாக இஸ்ரேல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோடை சுற்றுலாவுக்காக கொடைக்கானலுக்கு அதிகளவு மக்கள் வருவார்கள். ஆண்டின் மற்ற நாட்களில் பிற நாடுகளில் இருந்து கொடைக்கானல், மதுரைக்கு சுற்றுலா வருவர். இவர்கள், ஒரு மாதம், 15 நாட்கள் தங்கி இருப்பார்கள்.
மதுரையில் சுகாதாரமான கழிப்பிட அறைகள், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள் இல்லாமல் ஆங்காங்கே திறந்தவெளியில், சாலையோரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரமில்லாத நகரமாக மாறிவிட்டது. வெளிநாட்டினரை ஈர்க்கும் சுற்றுலா கட்டமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாதது, முறையில்லா ஆட்டோ, சுற்றுலா வழிகாட்டி, ஹோட்டல் அறை கட்டணம் உள்ளிட்டவற்றால் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் வரத் தயங்குகின்றனர். அதனால், தற்போது வெளிநாட்டினர் மதுரைக்கு வர அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது