தொழில்நுட்ப சேவையை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக தேர்தல் துறை கைகோக்கிறது.
தமிழக தேர்தல் துறையில் ஆன்லைன் முறையின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்தல், வேட்பாளர்கள் கூட்டங்களுக்கான அனுமதி பெறுதல் உள்ளிட்ட சேவை கள் ஆன்லைனில் வழங்கப் படுகின்றன.
இவற்றுக்காக, தமிழக தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தை, தேசிய தகவல் நிறுவனம் (என்ஐசி) பராமரிக் கிறது. இந்நிலையில் தொழில் நுட்ப சேவைகளை மேம்படுத்தும் விதமாக தற்போது, எல்காட் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக தேர்தல் துறை கைகோத்துள்ளது. இனி, தமிழக தேர்தல் துறையின் இணையதளம், தொழில்நுட்ப சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் பராமரிக்கும்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விரைவில் பராமரிப்புப் பணிகள் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.