தமிழகம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுங்கள்: தமிழக பாஜக

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:

மருத்துவ மாணவர்களுக்கு மேற்கத்திய நாடுகளின் நடைமுறைக்கு மாற்றாக இப்போது பரிந்துரைக்கப்பட்டிருப்பது, இந்திய பண்பாட்டையொட்டி உள்ள உறுதிமொழி. இதை ஆங்கிலத்திலேயே எடுத்துக் கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், சம்ஸ்கிருதத்தில் எடுக்கப்பட்டது என்று பொய் சொல்லி, மக்களின் மொழி உணர்வை தூண்டிவிட்டுள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரிடீன், மாணவர்களிடம் மன்னிப்புகேட்டு, டீன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

SCROLL FOR NEXT