தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வ தற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கவில்லை. இதனால் காங்கி ரஸ் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் திமுக கூட்டணியில் காங்கி ரஸ் கட்சி 41 இடங்களில் போட்டி யிட்டது. இதில் காரைக்குடி, நாங்குநேரி, விளவங்கோடு, தாரா புரம், குளச்சல், கிள்ளியூர், உதகமண்டலம், முதுகுளத்தூர் ஆகிய 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய் வதற்கான ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சின்னா ரெட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பங்கேற்றனர்.
இதில் 8 எம்எல்ஏக்களிடமும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஷீலா தீட்சித், தனித் தனியாக ஆலோசனை நடத் தினார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, ஷீலா தீட்சித் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் சட்டப்ரேவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.
இதற்காக ஒவ்வொரு எம்எல்ஏ விடமும் நானே தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தேன். எம்எல்ஏக்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக்கூறி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை அறிவிப்போம்.
இதற்காக சோனியாகாந்தியை தற்போது தொடர்புகொண்டேன். ஆனால் அவரிடம் பேச இயல வில்லை. இந்த விவகாரத்தில் எந்த இழுபறியும் கிடையாது. கூட்டம் சுமூகமாகவே முடிந்தது
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சேபம்
காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப் பட்டது. ஆனால் ஷீலா தீட்சித் தலைமையில் நடந்த கூட்டத் தில் எம்எல்ஏக்கள் சிலர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தால், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதாக கூறப்படுகிறது.