விருதுநகர் தொகுதியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து அல்லம் பட்டியில் நடிகை விந்தியா நேற்று முன்தினம் இரவு பேசியதாவது:
அதிமுக தேர்தல் அறிக் கையில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக வெளியிட்டுள்ளது தேர்தல் அறிக்கை இல்லை. அது தேறாத அறிக்கை. மக்களுக்காக திட்டம் போடாமல் வீட்டுக்காகவே திட்டம் போடுவது திமுக.
எல்லோரும் தாங்கள் செய்த சாதனைகளைக் கூறி ஓட்டு கேட் பார்கள். ஆனால், கருணாநிதியும், ஸ்டாலினும் தங்களது வயதைக் கூறி ஓட்டு கேட்கிறார்கள்.
சோனியாவுடன் ஒரே மேடை யில் பேசியதற்காகவும், ராகு லுடன் ஸ்டாலின் ஒரே மேடையில் பேசியதற்காகவும் கருணாநிதி சந்தோஷப்படுகிறார். ஆனால் ஸ்டாலின், அழகிரியை ஒரே மேடையில் பேச வையுங்கள் பார்ப்போம்.
தேர்தல் நெருங்கியதும் கரு ணாநிதியை வைத்து பெரிய நாடகம் ஒன்றை அரங்கேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அனுதாப ஓட்டு வாங்க வேண்டும் என்று திமுக நடத்தும் நாடகத்தை வாக்காளர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.