புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்டக் குழு கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. அதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது. நான் போட்டியிட்ட ஒட்டப்பிடாரம் தொகுதியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் தலையீடு அதிக மாக இருந்ததால் எங்களால் சுதந்திர மாகச் செயல்பட முடியவில்லை. ஒட்டப்பிடாரம், ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் ஜூன் 1-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவு டன் இணைந்து போட்டியிடுவோம். திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து உரிய விசா ரணை நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்தான் திமுக வின் வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுக பெற்றது வெற்றியுமல்ல, திமுக பெற்றது தோல்வியுமல்ல.
தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லி தலைமை தேர்தல் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது என்றார்