ராமேசுவரம்: மீன்பிடித் தடை காரணமாக தமிழகம், கேரளாவில் மீன்கள் விலை உயர்ந்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடித் தடைக் காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இத்தடை ஜுன் 15 வரை அதாவது 61 நாட்கள் அமலில் இருக்கும். இதனால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன் பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல் லாமல் கரையோரங்களில் நங்கூர மிட்டுள்ளன.
இது குறித்து ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் கூறியதாவது:ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் நாட்டுப் படகு மீனவர்கள், கரை வலை மீனவர்கள் மட்டுமே மீன் களைப் பிடிக்கின்றனர். நாட்டுப் படகு மீனவர்களின் மீன்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தனுஷ் கோடி கரை வலை மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது.
மீன்பிடி தடையால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் மீன்கள் விலை உயர்ந்துள்ளன. ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிலோ ரூ.100-க்கு விற்ற மத்தி மற்றும் சூடை மீன் தற்போது 120 ரூபாயாகவும், ரூ.800-க்கு விற்ற வஞ்சீரம் 1,000 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
ரூ.400-க்கு விற்ற கிழக்கான், பாறை மீன்கள் 500 ரூபாயாகவும், 200 ரூபாய்க்கு விற்ற மணலை மீன் 250 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.