தமிழகம்

வியாசர்பாடியில் 14 பேரை கத்தி, அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

செய்திப்பிரிவு

வியாசர்பாடியில் 14 பேரை கத்தி, அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் கத்தி, அரிவாள் போன்றவற்றால் சாலையில் சென்றவர்களை கண்மூடித்தனமாக வெட்டினர். இதில் வியாசர்பாடி எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரகலாதன்(17), சாமந்திப்பூ நகரை சேர்ந்த புருஷோத்தமன் (35), முனி யாண்டி (22), சுரேஷ்கு மார்(18), வேலு(35), சந்திரன்(38) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந் தனர். கழுத்து, கை, மார்பு என பல இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் வந்தது. மேலும் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகா யம் அடைந்த 6 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சத்தியமூர்த்தி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

வியாசர்பாடி போலீஸார் நடத் திய விசாரணையில், ஜி.கல்யா ணபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (22), அருண்(22), எட்டியப்பன்(23) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. 3 பேரும் போதை மாத்திரை பயன்படுத்தியதால் தன்னிலை மறந்து கத்தி, அரிவா ளால் கண்ணில் பட்டவர்களையெல் லாம் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல வண்ணாரப் பேட்டை சாலையிலும் அவர்கள் சாலையில் கத்தி, அரிவாளுடன் செல்ல வண்ணாரப்பேட்டை போலீ ஸார் 3 பேரையும் பிடித்து வியாசர் பாடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT