சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு தினமும் 100 மாணவர்கள் 4 கி.மீ. நடந்து சென்று வருகின்றனர்.
தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி விளங்குடி கிராமத்தில் 150 குடும்பங்களும், விளங்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் 40 குடும்பங்களும் வசிக்கின் றன.
மேலும் கண்ணங்குடியில் இருந்து 4 கி.மீ.-ல் உள்ள இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் 4 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து விளங்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த வனிதா கூறியதாவது: எங்கள் பகுதிக்கு சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் கூட வராது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கள் பகுதியில் பேருந்தை பார்த் ததில்லை. தனித்தீவு போல் வாழ்கிறோம். எங்களுக்கு சாலை மற்றும் பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும், என்றார்.