சென்னை: தமிழகத்தில் 2 நாளில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் மின் தடை நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி கடந்த 28 ஆம் தேதி தமிழகத்தில் 17,370 மெகா வாட் மின்சார ஒரே நாளில் பயன்படுத்தப்பட்டள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில் 2வது முறையாக நேற்று தமிழகத்தில் மின்சார பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி 29ம் தேதி 17,563 மெகா வாட் மின்சார பயன்படுத்தப்பட்டுள்ள்ளது.
இது குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "நேற்று 29/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,563 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 28ல் , 387.047மி.யூ / 17,370 MW"
ஏப்ரல் மாதமே மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மே மாதத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.