சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கே.கோவி்ந்தராஜன் திலகவதி அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமதுரை கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் 21 நீதிபதிகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையி்ல் 15 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.