சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 9 ஆர்டிஓக்கள் மூலம்அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. வாகனங்களின் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் எப்சி (தகுதி சான்று) வழங்கக்கூடாது என போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட் டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம்37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகி றது. அந்த வகையில், கடந்தசில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப் பட்டு வருகின்றன.
பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு,ஜன்னல்கள், படிகள், தீயணைப்புக் கருவிகள், முதல்உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.
ஓட்டுநர்களுக்கும்...
பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அந்த வாகனம் இயக்குவதற்கான எப்சி (தகுதிச் சான்று) அளிக்கப் படாது. இதுதவிர ஓட்டுநர்களின் பார்க்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 9 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மூலம் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில்ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பள்ளிவாகனங்களில் ஆய்வு குறித்து நேற்று முன்தினம்மாவட்ட ஆட்சியர் தலைமை யில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
1,800 பள்ளி வாகனங்கள்
அதன்படி, சென்னையில் உள்ள அயனாவரம், அண்ணாநகர், தண்டையார் பேட்டை, வள்ளலார் நகர், கொளத்தூர், மந்தைவெளி, திருவான்மியூர், கே.கே.நகர், விருகம்பாக்கம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவல கங்கள் மூலம் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும். சுமார் 1,800 பள்ளி வாகனங்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆய்வின்போது வாகனத்தின் பாதுகாப்பில் குறைபாடுஇருந்தால் எப்சி வழங்கப் படாது. பெரிய அளவில் குறைபாடு இருந்தால், சம்பந்தப் பட்ட வாகனத்தின் பர்மிட் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்’’ என்றனர்.