தமிழகம்

மே மாதம் முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

செய்திப்பிரிவு

கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல, ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி விழாக் காலங்களில் வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வனத்துறை யினர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “விழாக் காலங்கள் முடிவுற்றதாலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தண்ணீருக்காகவும், உணவுக் காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக உள்ளது.

எனவே, மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எனவே, வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து, யாரும் மலைப்பாதையில் செல்ல வேண்டாம்” எனத் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT