கோழிகமுத்தி யானைகள் முகாமில் உயிரிழந்த விஜயலட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்திய வனத்துறையினர். 
தமிழகம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் விஜயலட்சுமி (71) என்ற வயதான பெண் யானை உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தது. கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளில் சில யானைகள் சவாரிக்கும், சில யானைகள் கும்கிகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், ஓய்வு பெற்ற பெண் யானை விஜயலட்சுமி கடந்த 7-ம் தேதி முதல் உடல்நலம் குன்றி இருந்தது. வனக் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில், விஜயலட்சுமி யானை சிசிக்சை பலனின்றி உயிரிழந்தது.

நேற்று காலை உதவி வனப்பாதுகாவலர் விஜயன் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் ஏ.சுகுமார் யானைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டார். உடல்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு சேகரம் செய்யப்பட்டு, வன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியபின் யானை நல்லடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT