விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் உள் ளது. இந்த நகரின் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரோவில் பவுண்டேஷ கட்டிடத்தில் “இப்போதே ஆரோவில் சுதந்திர நாடாக மாறவேண்டும் “என்று பொருள்படும்படியான சர்ச்சைக்கு உரிய வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆரோவில் பவுண்டேஷனின் செயலாளர் சீனிவாசமூர்த்தி, ஆரோவில் காவல் நிலை யத்தில் அளித்துள்ளார். புகாரில், "இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் விதமானவாசகத்தை யாரோ எழுதியுள் ளனர். தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.