தமிழகம்

மாநில அளவில் அரபி மொழியில் முதல் இரு இடங்களை பெற்ற சென்னை மாணவிகள்

செய்திப்பிரிவு

அரபி மொழி பாடத்தில் சென்னை யில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதல் 2 இடங்களைப் பெற்றுள்ளனர்.

சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள மூர்துசேவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.அமதுல் கரீம், ஏ.அஸ்ரானா சுல்தானா ஆகியோர் அரபி மொழிப் பாடத்தில் 200-க்கு தலா 198 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். எஸ்.அமதுல் கரீம் 1200-க்கு 888 மதிப்பெண்களும், ஏ.அஸ்ரானா சுல்தானா 865 மதிப்பெண்களும் பெற் றுள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் இருவரும் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விரும்பிப் படித்ததால்தான் அரபிக்கில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. ஆசிரியர்களின் உதவியும் வெற்றிக்கு காரணம்.

மாநில அளவில் இடம் பிடிப்போம் என எதிர்பார்க்க வில்லை. இருவரும் மேற் கொண்டு பி.எஸ்.சி. கணிதம் படிக்க உள்ளோம். ஆசிரியராவதே எங்கள் விருப்பம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT