தமிழகம்

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா, மருத்துவ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் சத்யபாமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையால் தேசிய கிராமப்புற மருத்துவ திட்டத்தின் (NRHM) கீழ் சித்தா, ஓமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி (இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டதாரிகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக மருத்துவ பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இப்பணியிடங்களுக் கான உத்தேச பதிவுமூப்பு பட்டியல் www.chennai.nic.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தேச பதிவுமூப்புக்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக கிளைக்கு (சென்னை, மதுரை) ஜூன் 6, 7-ம் தேதிகளில் காலை 10 மணிக்கு தங்கள் அசல் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஜாதிச் சான்றுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.

ஏற்கெனவே இப்பதவியில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் உத்தேச பதிவுமூப்புக்குள் இடம்பெற்றி ருந்தால் நேர்காணலில் அவர்கள் கலந்துகொள்ளத் தேவையில்லை. பதிவுதாரர்கள் இப்பணிக்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் போது இறுதி பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT