தமிழகம்

சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு போட்டி: பபாசி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெறவுள்ள 39-வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை பபாசி நடத்தவுள்ளது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, ஜூன் 6-ம் தேதி காலை 11 மணிக்கு ‘வாசிப்பு மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துமா?’, ‘கலாம் கனவுகள்’, ‘உலகைப் புரட்டிய புத்த கங்கள்’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூன் 7-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியும் நடைபெற உள்ளது.

ஜூன் 8-ம் தேதி காலை 10 மணிக்கு 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும், 1 முதல் பிளஸ் 2 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகளும் நடைபெற உள்ளன. ஜூன் 9-ம் தேதி 6 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ‘நூல் பல கல்’ எனும் தலைப்பிலும், 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு ’‘ங’ போல் வளை’ எனும் தலைப் பிலும் பேச்சுப்போட்டிகள் நடை பெற உள்ளன.

சிறுகதைப் போட்டி தவிர, பிற போட்டிகள் அனைத்துக்குமான பரிசுகள் புத்தகங்களாக வழங்கப் படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் tamilnool@tamilnool.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற 9500566308 என்ற செல்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT