தமிழகம்

மத்திய மண்டலத்துக்கு 7 அமைச்சர்கள்

செய்திப்பிரிவு

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக அமைச்சரவையில் மத்திய மண்டலத்துக்கு 7 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம் பலூர், அரியலூர், தஞ்சை, திரு வாரூர், நாகை ஆகிய 8 மாவட் டங்கள் உள்ளன. இந்த 8 மாவட் டங்களில் 41 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதமுள்ள 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் அதிமுக 23 தொகுதிகளிலும், திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை யில் 28 பேர் அமைச்சர்களாக இன்று (மே 23) பொறுப்பேற்கின் றனர். இதில் 7 அமைச்சர்கள் மத் திய மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், ரங்கம் எஸ்.வளர்மதி, வெல்லமண்டி என்.நடராஜன், எம்.ஆர்.விஜய பாஸ்கர், ரா.துரைக்கண்ணு ஆகியோர் இன்று அமைச்சர்களா கப் பொறுப்பேற்கின்றனர். முன் னாள் அமைச்சர்களான ஆர்.காம ராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோ ருக்கு, அவர்கள் ஏற்கெனவே வகித்த உணவு மற்றும் சுகாதா ரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்க ருக்கு, கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வென்ற வி.செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட போக்கு வரத்து துறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT