தமிழகம்

‘சி-டெட்’ தேர்வு முடிவுகள்: சிபிஎஸ்இ வெளியீடு

செய்திப்பிரிவு

கேந்திரிய வித்யாலயா பள்ளி கள், நவோதயா பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரி யர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வை சிபிஎஸ்இ அமைப்பானது ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, செப்டம்பர்) நடத்துகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் சிடெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.ctet.nic.in) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் பதி வெண்ணை குறிப் பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

          
SCROLL FOR NEXT