தமிழகம்

பாஜக வெற்றி பெற்றால் அதிக திட்டங்களை பெறலாம்: மத்திய அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

பாஜக வேட்பாளர்கள் சின்னச்சாமி (திருப்பூர் வடக்கு), பாயிண்ட் மணி (திருப்பூர் தெற்கு) ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும் திமுக, அதிமுக கட்சிகள், மக்களுக்கு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செய்து தரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக்கூட தமிழக அரசு உற்பத்தி செய்யவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை அளிக்க உள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் சாலை திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஏற்க, தமிழக அரசு மறுக்கிறது.

பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மத்திய அரசிடம் இருந்து அதிக திட்டங்களை கேட்டுப் பெறலாம். எனவே, பாஜக வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT