6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்களது வெள்ளை அங்கியை சமிர்ப்பித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
தமிழகம்

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 6-வது நாளாக தொடர் போராட்டம்

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா அரசுமருத்துவக் கல்லூரியில் பயிலும்முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதே நிலையில் பிறவகுப்பு மாணவர்களுக்கு கடந் தாண்டைப் போலவே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. இந்தக் கட்ட ணத்தையே கட்ட வேண்டும் என்றுராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப் பித்துள்ளது.

இதைக் கண்டித்து, இக்கல்லூரி யில் பயிலும் 2,3,4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கடந்த 11-ம்தேதி முதல் 20-ம் தேதி வரை 11 நாட்கள் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக்கல்லூரி வளா கம், மருத்துவக்கல்லூரி புல முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரியின் 2,3,4-ம்ஆண்டு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6 வது நாள் போராட்டமாக, தங்களது மருத்துவப் பணிக்காக தரப்பட்ட வெள்ளை அங்கியை சமிர்ப்பிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

“எங்களது கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொட ரும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டமருத்துவ மாணவர்கள் தெரிவித் தனர்.

இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாண வர்கள் விடுதியை காலி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டு, விடுதி மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்து உணவுகளை வரவைத்து போராட்டம் நடக்கும் இடத்திலேயே மாணவர்கள் உணவருந்தினர்.

SCROLL FOR NEXT