தமிழகம்

முதல்வருக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள தற்காக அதிமுக பொதுச் செயலாள ரும், தமிழக முதல்வருமான ஜெய லலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், திமுக அணி சுமார் 100 இடங் களில் வெற்றி பெற்றுள்ளது மனநிறைவை தந்துள்ளது. மேலும், எனது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 3 தொகுதிகளில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு திமுக தொண்டர்களின் பெரும்பணியும், காங்கிரஸ் தோழர்களின் அரும்பணியுமே காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT