தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற் றத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2-ம் தேதி திருவனந்தபுரத்தில், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் மு.தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்பிக்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மு.தம்பிதுரை, பி.வேணுகோபால், ஏ.நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னார்ட், வெங்கடேஷ் பாபு ஆகியோர் மீண் டும் ஒரு புகார் கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி யுள்ளனர்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அதிக அளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் ஏற்கெனவே அளித்த மனுவின் தொடர்ச்சியாக இந்த மனு அனுப்பப்படுகிறது.
குறிப்பாக திமுகவால் உள்நோக் கத்துடன் அளிக்கப்பட்ட மனுக்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை திரித்துக் கூறி, திமுக அரசியல் ஆதா யம் தேட முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டதை, அரசியல் ஆதாயத்துக்காக கருணாநிதி, தவறாகவும், முறை கேடாகவும் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. கருணாநிதியின் கருத்து கள், உயர் அதிகாரிகளுக்கு மோச மான அச்சுறுத்தலை ஏற்படுத்துவ துடன், தேர்தல் பணிகளில் ஈடபட்டுள்ள அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
எனவே, உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்து கிறோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை தேர்தல் பிரச் சாரத்துக்கு பயன்படுத்திய கருணா நிதியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.