சென்னை: சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தில், எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசும்போது, திருப்பத்தூர் மடவாளம் கிராமத்தில் மண்பாண்ட தொழிற்கூடம் அமைக்கப்படுமா என்றும், கோ-ஆப்டெக்ஸ் புதிய கட்டிடம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இவற்றுக்குப் பதில் அளித்துஅமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘மடவாளம் கிராமத்தில் சிலர் தனித்து தொழில் செய்து வருகின்றனர். கதர் கிராம வாரியத்தில் பதிவு செய்யவில்லை. குறைந்தபட்சம் 21 பேர் சேர்ந்து கூட்டுறவு சங்கம் அமைத்து, நிலம் அளிக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
மேலும், தமிழகத்தில் 105 கோ-ஆப்டெக்ஸ் கடைகள், வெளி மாநிலங்களில் 49 கடைகள் என154 கடைகள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது’’ என்றார்.