ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

அதிமுக உட்கட்சித் தேர்தல்: சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு பழனிசாமி மனு தாக்கல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில், புறநகர் மாவட்ட பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களான அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அர்ஜூனன், நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் ஆகியோரிடம் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இப்பதவிக்கு பழனிசாமியைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்எல்ஏ-க்கள் மணி, சித்ரா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT