பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி | கோப்புப் படம். 
தமிழகம்

துணை வேந்தர்கள் நியமன மசோதா: பாமகவின் யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பதாக அன்புமணி மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்க சட்டம் கொண்டுவரப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணை வேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT