தமிழகம்

குஜராத் மாடல் | 'ஆளுநர் இடத்தில் அரசு' - துணை வேந்தர் நியமனத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்தின்படி, இனி ஆளுநர் இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் அரசுதான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநில சட்டங்களை பின்பற்றி இந்தப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தவர்களை அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவிற்கு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அரசை மதிக்காத ஆளுநர்:

இந்த மசோதா மீது பேரவையில் பேசிய முதல்வர் மு.க,ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு உயர் கல்வியில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் குஜராத்தைப் போல், தமிழகத்திலும் து.வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமுன்வடிவை நிறைவேற்றியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

மசோதாவில் கூறியுள்ளது என்ன?

இந்த சட்ட மசோதாவின்படி இனி வேந்தர் என்ற சொல் உள்ள இடத்தில் எல்லாம் அரசு என்ற சொல் இடம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம். துணை வேந்தரானவர் 2000-ஆம் கர்நாடக மாநில பல்கலைக்கழக சட்டத்தின்படி அரசு இசைவுடன் வேந்தரால் நியமிக்கப்பட வேண்டும். மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு மாநில அரசானது மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என்று கருதுகிறது.

என்னென்ன பல்கலைக்கழகம்?

தமிழகத்தில் மதுரை காமராஜர், சென்னை அண்ணா, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், கொடைக்கானல் அன்னை தெரசா, காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்ததரனார், சேலம் பெரியார், சென்னை திறந்தநிலை, வேலூர் திருவள்ளூவர், சென்னை கல்வியல் பல்கலைக்கழகம், கடலூர் அண்ணாமலை எனறு மொத்தம் 12 பல்கலைக்கழங்களின் துணை வேந்தவர்கள் இனி அரசுதான் நியமிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் இடத்தில் அரசு

தற்போது உள்ள சட்டத்தின்படி துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார். மசோத சட்டம் ஆனப் பிறகு தேடல் குழுவைத் தமிழக அரசுதான் அமைக்கும்.

தற்போது உள்ள சட்டத்தன்படி தேடுதல் குழு பரிந்துரை செய்யும் மூவரில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்வார். மசோதா சட்டம் ஆன பிறகு மாநில அரசே ஒருவரை தேர்வு செய்யும்.

தற்போது உள்ள சட்டத்தின்படி துணை வேந்தர் மீது புகார் மீது ஆளுநர்தான் இறுதி முடிவு எடுப்பார். மசோதா சட்டம் ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

தற்போது உள்ள சட்டத்தின் படி புகார் வந்தால் ஆளுநரே துணை வேந்தரை நீக்க முடியும். மசோதா சட்டம் ஆன பிறகு, புகார் தொடர்பாக துணை வேந்தர் தன்னுடைய தரப்பில் நியாங்களை சொல்ல கால அவகாசம் அளிக்கப்படும்.

இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி பார்த்தால், இனி மாநில பல்கலைக்கழங்களின் ஆளுநருக்கான அனைத்து அதிகாரங்களும் நீக்கப்பட்டது. அந்த அதிகாரிரங்கள் அனைத்தும் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டள்ளது.

SCROLL FOR NEXT