சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 770 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அங்கு பணிபுரிய உள்ள 20 ஆயிரம் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 406 வாக்குச் சாவடிகள் பதற்றமானதாக உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி 8-ம் தேதி தொடங்குகிறது. அவற்றை பொருத்திய பின், வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் வரை பாதுகாப்பாக வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.