தமிழகம்

கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.35 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.12-க்கும் குறைவாக விற்கப்பட்டு வந்தது. கோடை காலம் தொடங்கியது முதல், அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, ஒரு கிலோ தக்காளி விலை கடந்த வாரம்ரூ.25 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. வெளி சந்தைகளில் முதல் தர தக்காளி கிலோ ரூ.50, நடுத்தர தக்காளி ரூ.30, பொடி தக்காளி ரூ.20 என விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40, அவரைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.20, பீட்ரூட் ரூ.12, கேரட், முருங்கைக்காய், நூக்கல் ரூ.8, வெங்காயம் ரூ.13, சாம்பார் வெங்காயம் ரூ.10, பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய் ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.8, முட்டைக்கோஸ் ரூ.6 என விற்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT