தமிழகம்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை

செய்திப்பிரிவு

சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். 5424 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்தி தேவி ஆகியோர் போட்டியெடுகின்றனர்.

SCROLL FOR NEXT