சிவகங்கை: சிவகங்கை ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுக்க, தினமும் ஏராளமானோர் வரு கின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் ‘இசேவை’ மையம்,’ ஆதார் மையம், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட மையம் உள்ளன.
இம்மையங்களில் விண்ணப் பிக்க ஏராளமானோர் வருகின் றனர். மனு கொடுக்க வருவோ ரிடம் இடைத் தரகர்கள் அணுகி, தங்களுக்கு அதிகாரிகளைத் தெரியும் என்றும் எளிதில் காரியங்களை முடித்துக் கொடுப்பதாகவும் கூறி பணம் வசூலிக்கின்றனர். அதேநேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சிலர் பொதுமக்களுக்கு மனு எழுதித் கொடுக்க ரூ.20 மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால், இடைத்தரகர்கள் சிலர், மனு எழுதிக்கொடுக்க ரூ.150 வசூலிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கு மனுக் கொடுக்க வந்த சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் அங்கிருந்த பெண் தரகர் மனு எழுத ரூ.150 வசூலித்துள்ளார்.
இதுபோன்று எழுத, படிக்கத் தெரியாத மக்களிடம் மனு எழுதிக் கொடுப்பதாகக் கூறி பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதையும், தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.