தமிழகம்

பொள்ளாச்சி அருகே பயங்கரம்: விடுதியில் இருந்த சிறுமிகளை நள்ளிரவில் கடத்தி பலாத்காரம்

செய்திப்பிரிவு

விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து அங் கிருந்த இரண்டு சிறுமிகளை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள் ளனர். இதுகுறித்து போலீஸார் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை ஆலயம் உள்ளது. இந்த திருச்சபை வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தற்போது 3 மாணவிகள் உள்பட 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 20 பேர் தங்கி படிக் கின்றனர். அதில் சிலர் திருச்சபை நிர்வாகத்தில் உள்ள பள்ளியிலும், இன்னும் சிலர் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

கத்தியைக் காட்டி...

புதன்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் விடுதிக்குள் புகுந்து, மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அதில் இரண்டு சிறுமிகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். எதிரே இருந்த தனியார் வணிக வளாக மேல்மாடிக்குக் கொண்டு சென்று, அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

விடுதியில் இருந்த சக மாணவர்கள், விடுதிக் காப்பாளரிடம் நடந்த விபரத் தைக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தேவாலய நிர்வாகத்தினர் இரவு முழு வதும் சிறுமிகளைத் தேடியுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் சிறுமி கள் வணிக வளாகத்தின் மேல் மாடியில் மூர்ச்சையாகிக் கிடந்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்த போலீ ஸார் இரண்டு சிறுமிகளையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிறுமி களுக்கு நடந்த மருத்துவப் பரிசோத னையில், இருவரும் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக போலீஸார் 3 தனிப்படை அமைத்து குற்றவாளி களைத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரை யும் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட காவல்துறைத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்

அனுமதி பெறாத விடுதி

சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறும்போது, ‘‘20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிற இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. பாதுகாப்பற்ற முறை யில் சிறுவர், சிறுமியர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக விடுதி நடத்து வதற்கு அனுமதி பெறவில்லை. எனவே விடுதியை மூட துரித நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஏராளமான தவறுகள்

தேவாலயத்தின் முன்னாள் நிர் வாகி எபிநேசர் கூறும்போது, ‘இங்கு பெண்கள் தங்க வைக்க அனுமதி யில்லை. அங்கீகாரம் இல்லாமல் விடுதி நடத்தப்படுவது குறித்து முன் னரே கண்டித்தோம். தற் போதுள்ள நிர்வாகிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இங்கு ஏராளமான தவறுகள் நடைபெற்றுள்ளன. இந்த சர்ச் நிர்வாகிகள் பலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன’ என்றார். இந்த விடுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பாக பொள் ளாச்சியைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர் மார்ச் 17 -ம் தேதி மாவட்ட நிர் வாகத்துக்கும், சமூக நலத் துறைக் கும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT