புதுச்சேரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில் சென்னையில் பணி புரிந்த இடத்தில் காதலித்த பெண் புகார் தெரிவித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டு பெற்றோருடன் மணமகன் கைது செய்யப்பட்டார்.
புதுவை முத்தரையர் பாளை யத்தை சேர்ந்தவர் ராஜேந் திர பிரசாத் (வயது 24). சென்னை யில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். முத்தரையர் பாளையம் பகுதி யில் வசிக்கும் பெண்ணுடன் சிறுவயதிலேயே அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு மயிலம் முருகன் கோவிலில் திங்கள்கிழமை திரு மணம் நடத்த முடிவு செய்யப் பட்டது. திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இரு வீட்டாரும் வினியோகித்து வந்தனர்.
இந்த நிலையில், ராஜேந்திர பிரசாத் வீட்டுக்கு சென்னையில் அவருடன் வேலை பார்த்து வரும் செஞ்சியைச் சேர்ந்த ஒரு பெண் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். அவரை, தனது நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரியும் ஊழியர் என குடும்பத்தினரிடம் ராஜேந்திர பிரசாத் அறிமுகம் செய்தார். அதையடுத்து இரவில் பிரசாத் வீட்டிலேயே அவர் தங்கினார்.
ஆனால், அந்த பெண்ணை சென்னையில் வைத்து ராஜேந்திர பிரசாத் காதலித்து வந்துள்ளார். எனவே, வீட்டில் அனைவரும் தூங் கிய பிறகு பிரசாத்திடம் அந்த பெண் தகராறு செய்ய தொடங்கினார். 2 ஆண்டுகளாக என்னை காதலித்து விட்டு மற்றொரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம்? என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரவு முழுவதும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக பிரசாத்தை எழுப்ப அவரது தாயார் வந்தபோது அவரையும் சென்னையில் இருந்து வந்த பெண் ணையும் காணவில்லை. அவர் களை திருமண வீட்டார் தேட தொடங்கினர்.
இதற்கிடையே, இருவரும் ஜிப்மர் மருத்துவமனையருகே நின்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அந்த பெண்ணை மீண்டும் சென்னைக்கு அனுப்ப பிரசாத் முயற்சித்துள்ளார். அத னால், இருவருக்கும் தகராறு ஏற்பட் டுள்ளது. அதிகாலை நேரத் தில் சாலையில் நின்று இருவ ரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் கும்பல் கூடியது. இருவரை யும் பிடித்து கோரிமேடு காவல் நிலையத்தில் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அனைத்து உண்மையும் தெரிய வந்ததால் மணப்பெண் வீட்டுக்கும், பிரசாத் வீட்டுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இரு தரப்பினரும் காவல் நிலையத்துக்கு வந்தனர். சென்னையிலிருந்து வந்த செஞ்சி பெண்ணின் வீட்டாருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. காவல் நிலையத்துக்கு மூன்று குடும்பத்தினரும் வந்து பேசினர்.
அப்போது, சென்னையில் பிரசாத்தின் இரண்டாவது காதல் குறித்து அறிந்த மணப்பெண் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர். சென்னையிலிருந்து வந்த செஞ்சி பெண்ணின் குடும்பத்தினரும் அவருக்கு அறிவுரை கூறி அழைத்து சென்ற னர்.
மேலும், மணப்பெண்ணின் தந்தை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மணமகன் ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "காதல் விவ காரத்தை மறைத்து திருமணம் செய்ய முற்பட்டதால் பிரசாத் மீதும், உடந்தையாக இருந்ததால் அவரது பெற்றோர் மீதும் 420வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்" என்றனர்.