சிவகங்கை: சிவகங்கையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார்.
சிவகங்கை புதுவாழ்வு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(80). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி(74). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். சக்திவேலும், சரஸ்வதியும் 55 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சக்திவேல் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி சில மணி நேரங்களில் மயங்கி விழுந்து இறந்தார். கணவன், மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.