தமிழகம்

கோவையில் அதிமுக - பாஜக மோதல்: கார் கண்ணாடி உடைப்பு

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுகவினர், பாஜகவினர் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் நேற்று மோதிக் கொண்டனர். இதில், வானதி சீனிவாசனின் உதவியாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கோவை ரங்கேகவுடர் வீதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வானதி சீனிவாசன் நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதிமுக கவுன்சிலர் ஆதிநாராயணன் மற்றும் அதிமுகவினர், வானதி சீனிவாசனை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், இரு தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண் டனர். இதில், வானதி சீனிவாச னின் உதவியாளர் மனோகர் மணிவண்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அப்பகுதிக்கு வந்த துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். அங்கிருந்து கலைந்து சென்ற அதிமுகவினர் கோவை கூட்செட் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவல கம் முன்பு கூடி, வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட் டனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘குடும்ப நண்பரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வ தற்காக சென்றேன். ஆனால், அதிமுகவினர் தோல்வி பயம் காரணமாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்து கலவரம் ஏற்படுத்தி னர். பெண் வேட்பாளர் என்றுகூட பாராமல் தகாத வார்த்தைகளை அதிமுகவினர் பயன்படுத்தினர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து இருதரப்பைச் சேர்ந்தவர்களும் வெரைட்டிஹால் போலீஸில் புகார் அளித்துள் ளனர்.

SCROLL FOR NEXT