தமிழகம்

392 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19,182 பேர் கைது - காவல்துறை தகவல்

செய்திப்பிரிவு

தமிழக தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. டெல்லியில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தேர்தல் பிரிவு டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்பு தொடர் பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையரிடம் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

19,416 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங் களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10,802 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 97 பேர் குற்ற வியல் நடைமுறைச் சட்டப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 12,875 பிடிவாரன்ட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 527 பிடிவாரன்ட் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் தற்போது 396 சோதனைச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. 3,160 குக்கிராமங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு 8,887 பேர் பிரச்சினைக்குரிய நபர்களாக அறியப்பட்டுள்ளனர். இவர்களில் 8,380 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT